Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் காணாமல் போன சில தங்க நகைகள் தலைமைப் பூசாரியிடம் இருந்து மீட்கப்பட்டன

ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் காணாமல் போன சில தங்க நகைகள் தலைமைப் பூசாரியிடம் இருந்து மீட்கப்பட்டதாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது.  

வாசிப்புநேரம் -
ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் காணாமல் போன சில தங்க நகைகள் தலைமைப் பூசாரியிடம் இருந்து மீட்கப்பட்டன

(படம்: Wikimedia Commons)

ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் காணாமல் போன சில தங்க நகைகள் தலைமைப் பூசாரியிடம் இருந்து மீட்கப்பட்டதாக கோவில் நிர்வாகக் குழு தெரிவித்தது.

கோவில் பூசைகளுக்குப் பயன்படுத்தப்படும் அந்த நகைகள் பூசை முடிந்த பிறகு தலைமைப் பூசாரியின் பொறுப்பில் கோவில் கருவறையில் வைக்கப்படுவது வழக்கம்.

அதன் பிறகு அவ்வப்போது நகைகளின் கணக்கு சரியாக உள்ளதா என்று சோதிக்கப்படும்.

கடந்த முறை நடத்தப்பட்ட கணக்குச் சோதனையின் போது சில தங்க நகைகள் காணாமல் போனது கண்டறியப்பட்டது.

அதைத்தொடர்ந்து தலைமைப் பூசாரியிடம் கோவில் நிர்வாகக் குழு விசாரணை நடத்தியது, அதன் பிறகு நகைகளை பூசாரி திருப்பிக் கொடுத்ததாக கோவில் நிர்வாகக் குழு கூறியது.

தற்போது எல்லா நகைகளும் சரியாக உள்ளதாக கோவில் நிர்வாகக் குழு தெரிவித்தது.

இருப்பினும் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நகைகள் காணாமல் போனதில் வேறு யாரும் சம்பந்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது தலைமைப் பூசாரி பிணையில் உள்ளார். அவர் மீது காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்