Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மரினா அணைக்கட்டின் 10ஆம் ஆண்டு நிறைவுக்கு 10 நிகழ்ச்சிகள்

மரினா அணைக்கட்டின் பத்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பத்து வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொதுப்பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
மரினா அணைக்கட்டின் 10ஆம் ஆண்டு நிறைவுக்கு 10 நிகழ்ச்சிகள்

(படம்: PUB)


மரினா அணைக்கட்டின் பத்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பத்து வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொதுப்பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் தொடங்கும் நிகழ்ச்சிகள் குடும்பங்களுக்கு வேடிக்கையாகவும் உற்சாகமளிக்கும் வகையிலும் அமையும் என்று கழகம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

வெள்ளத் தடுப்பு, தண்ணீர் விநியோகம், பொழுதுபோக்கு வசதிகள் ஆகிய மூன்று அம்சங்களை மையமாகக் கொண்டது மரினா அணைக்கட்டு.

அந்த வகையில் அவற்றைப் பற்றியே கொண்டாட்டங்கள் அமைவது திட்டம்.

இம்மாதம் தொடங்கி அக்டோபர் வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மரினா அணைக்கட்டு நகரின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்கப்பூரின் முதல் அணைக்கட்டாகும்.

2008ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி பிரதமர் லீ சியென் லூங் அணைக்கட்டை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.

பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அக்டோபர் இறுதிவரை நடைபெறும் ஒரு கண்காட்சி அணைக்கட்டு உருவான கதையை விளக்கும்.

மார்ச் பத்தாம் தேதி வருகையாளர்களை ஈடுபடுத்தி கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஏப்ரல் 14ஆம் தேதி துடிப்பான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் வகையில் யோகாசனம், ஒருங்கிணைந்த குழு நடனம், தண்ணீர் விளையாட்டுகள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அணைக்கட்டின் பசுமைக் கூரையில் ஜூன் 9ஆம் தேதி தொடர்ச்சியாகத் திரைப்படங்கள் திரையிடப்படும்.

ஜூலை 28, 29ஆம் தேதிகளில் சிங்கப்பூரின் 'பட்டம் விடும் தினம்' நடைபெறும். பட்டம் விடுவதில் திறமையானவர்கள் அந்த நாட்களில் தங்கள் திறளை வெளிக்காட்டலாம்.

இவ்வாண்டின் தேசியதின வாரயிறுதியின் போதும் அணைக்கட்டில் பிரமாண்டமான அங்கங்களை எதிர்பார்க்கலாம்.

கொண்டாட்டங்களின் நிறைவு அங்கங்கள் அக்டோபர் 26 முதல் 28 வரை இடம்பெறும்.

அதில் ஓர் அங்கமாக மரினா அணைக்கட்டைச் சுற்றி பொதுமக்களுக்குச் சிறப்புப் படகுச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்