Images
  • Marina Bay Countdown
    (படம்: AFP)

சிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்


புத்தாண்டை முன்னிட்டு மரினா பே வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளின் ஓர் அங்கமாக, முதல்முறையாக ஒரு மணிநேர வாணவேடிக்கை இடம்பெறும் என்று நகரச் சீரமைப்பு ஆணையம் கூறியிருக்கிறது.

வண்ண விளக்குகள், நடனங்கள், நெருப்பு சாகசங்கள் போன்றவை வாண வேடிக்கைக்கு மெருகூட்டும் என்று அது குறிப்பிட்டது.

மீடியகார்ப்பின் ஏற்பாட்டில் The Promontory- யில் , Let’s Celebrate 2019 நிகழ்ச்சி முதல்முறையாக இலவசமாக இடம்பெறும்.

மரினா பே வட்டாரத்தில் உள்ள முக்கியச் சின்னங்களில் ஒளித் திரைகள் அமைக்கப்படும்.

மரினா பே சேண்ட்ஸில் விதவிதமான உணவுகளைக் கொண்ட Food Truck Fest, எஸ்பிளனேடில் வெளிப்புறக் கலைப்படைப்புகள்,
Bayfront -டில் Prudential-இன் கேளிக்கை விழா ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டுக்கு முதல்நாள் இரவில், பாடாங் அருகே சாலைகள் மூடப்படும். அங்கு வெவ்வேறு கேளிக்கை அம்சங்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டது.
  

Top