Images
  • mbs (1)
    (கோப்புப் படம்: Reuters)

புதிய கிருமித்தொற்றுக் குழுமம்: Marina Bay Sands சூதாட்டக் கூடம் 2 வாரங்களுக்கு மூடப்படும்

சிங்கப்பூரில் 2 புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று, மரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) சூதாட்டக் கூடம் சம்பந்தப்பட்டது.

அதில் தற்போது 11 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மற்றொரு புதிய கிருமித்தொற்றுக் குழுமம், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் சம்பந்தப்பட்டது.

அதில் 4 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூரில் தற்போது, 28 கிருமித்தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மரினா பே சாண்ட்ஸ் சூதாட்டக் கூடம் தொடர்பான கிருமித்தொற்றுக் குழுமத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அங்கு கிருமிப்பரவல் தொடர்ந்து ஏற்படலாம் என அது குறிப்பிட்டது.

கிருமிப்பரவலை முறியடிக்க, அந்த வளாகத்தில் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இன்று முதல், அடுத்த மாதம் 5ஆம் தேதிவரை, மரினா பே சாண்ட்ஸ் சூதாட்டக் கூடம் பொதுமக்களுக்கு மூடப்படும்.

அங்கு பணியாற்றும் அனைவருக்கும் சிறப்புப் பரிசோதனை நடத்தப்படவிருக்கிறது.

இம்மாதம் 7ஆம் தேதிக்கும், நேற்றுக்கும் இடைப்பட்ட காலத்தில் அங்கு சென்று வந்த பொதுமக்களுக்கும் இலவசப் பரிசோதனை நடத்தப்படும்.

Top