Images
  • Maritime Cybersecurity
    (படம்: MCI)

கடல்துறை இணையப் பாதுகாப்பைக் கண்காணிக்க புதிய நிலையம்

சிங்கப்பூரில் கடல்துறை இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்காணிப்பதற்கான புதிய நிலையம் இன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

புதிய நிலையம் ST Engineering மையத்தில் அமைந்துள்ளது.

இணையப் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் முதல் நிலையமான இது கடந்த ஆண்டு நவம்பர் முதல் செயல்பட்டு வருகிறது.

இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அவற்றைக் கையாள்வதற்கு நிலையம் உதவும்.

அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வரும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு இடையே^ சிங்கப்பூரின் கடல் போக்குவரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் ஆணையம் எடுத்துரைத்தது.

அதோடு அடுத்த ஆண்டிலிருந்து கடல்துறை சார்ந்தவர்களுக்கு புதிய இணையப் பாதுகாப்புப் பயிற்சி வகுப்புகள்^ நடத்தப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
  

Top