Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடல்துறைப் பூசல்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வதே சிறந்தது: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

கடல் எல்லை வரையறுத்தல் தொடர்பான சர்ச்சைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் சிறந்த தீர்வை எட்டலாம் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.  

வாசிப்புநேரம் -
கடல்துறைப் பூசல்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வதே சிறந்தது: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

(படம்: Reuters/Henning Gloystein)

கடல் எல்லை வரையறுத்தல் தொடர்பான சர்ச்சைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் சிறந்த தீர்வை எட்டலாம் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு தரப்பினருக்கும் ஏற்புடைய இணக்கமான
தீர்வு அடைய அது உதவும்.

ஆனால், அப்படி ஒரு தீர்வை எட்ட முடியவில்லை என்றால் அனைத்துலக அளவில் இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொண்ட மூன்றாம் தரப்பின் உதவியுடன் அந்த சர்ச்சைக்குத் தீர்வுகாண சிங்கப்பூர் தயாராய் இருப்பதாக வெளியுறவின் அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சர்ச்சையின் தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் நேற்று, உலக நிறுவனக் கடல் சட்டத்தின்கீழ் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அது குறித்து சிங்கப்பூர் மலேசியாவிடம் தெரிவித்துவிட்டது.

கடல் சர்ச்சையின் தொடர்பில் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில், சிங்கப்பூரும் மலேசியாவும் சந்தித்துப் பேசவிருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்