Images
  • Market
    படம்: AFP

நகரமன்றங்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஈரச்சந்தைகள் சிலவற்றில் தடுப்புகளை அமைத்துள்ளன

சிங்கப்பூரில் 3 நகரமன்றங்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஈரச்சந்தைகளில் தடுப்புகளை அமைத்துள்ளன.

அங்கு கட்டாய SafeEntry பதிவுமுறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி நடைபெறும் வழக்கமான வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகக் குழுமத்துடன் தொடர்புடைய 7 சந்தைகளில் ஒன்று கேலாங் பாரு சந்தை.

தாமான் ஜூரோங், புக்கிட் தீமாஆகிய சந்தைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்புக்கு வந்தபோது இந்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

எனவே இவை வாடிக்கையாளர்களுக்குப் புதிதல்ல.

தேக்கா சந்தையில் இந்த நடவடிக்கைகள் அன்றாடம் நடப்பில் உள்ளன.

கட்டுப்பாடுகள் தொடர்ந்து பின்பற்றப்படும் 13 இடங்களில் ஒன்றாகத் தேக்கா சந்தை உள்ளது. 

Top