Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"நம்பமுடியவில்லை"-இரு தங்கம் வென்று சிங்கப்பூரைப் பெருமைப்படுத்திய மார்ட்டினா

"நம்பமுடியவில்லை"-இரு தங்கம் வென்று சிங்கப்பூரைப் பெருமைப்படுத்திய மார்ட்டினா

வாசிப்புநேரம் -


காமன்வெல்த் விளையாட்டுகளின் குறிசுடும் போட்டியில் சிங்கப்பூருக்கு இரு தங்கப் பதக்கங்களை வென்ற மார்ட்டினா வெலோசோ வெற்றிக்களிப்புடன் சிங்கப்பூர் திரும்பியிருக்கிறார்.

என்னால் இன்னமும் நம்பமுடியவில்லை.


நேற்று சிங்கப்பூர் திரும்பிய மார்ட்டினா நண்பர்கள், குடும்பத்தினரிடம் கண்ணீர் மல்கச் சொன்னார்.

18 வயது மார்ட்டினா இரு சாதனைகளை நிகழ்த்தி சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

பெண்களுக்கான 10 மீட்டர், 50 மீட்டர் இரு குறிசுடும் போட்டியிலும் தங்கம். இத்தனைக்கும் அவரது பயிற்சிக் காலம் ஓராண்டுக்கும் குறைவே!

சிங்கப்பூர் குறிசுடும் அணி, காமன்வெல்த் விளையாட்டுகளின் 13 குறிசுடும் போட்டிகளில், 8-இல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

2020 ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைக்க ஆவலுடன் காத்திருக்கிறது அணி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்