Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பசுமை, நீடித்த நிலைத்தன்மை தொடர்பான கடன்களுக்கு புதிய மானியத் திட்டம்

சிங்கப்பூர் நாணய வாரியம் பசுமை, நீடித்த நிலைத்தன்மை தொடர்பான கடன்களுக்கு ஆதரவளிக்கும் மானியத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
பசுமை, நீடித்த நிலைத்தன்மை தொடர்பான கடன்களுக்கு புதிய மானியத் திட்டம்

(கோப்புப் படம்: CNA)

சிங்கப்பூர் நாணய வாரியம் பசுமை, நீடித்த நிலைத்தன்மை தொடர்பான கடன்களுக்கு ஆதரவளிக்கும் மானியத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.

அதன்-மூலம், பசுமை, நீடித்த நிலைத்தன்மை தொடர்பான கடனுதவி பெறுவதில் நிறுவனங்களும் வங்கிகளும் கூடுதல் ஆதரவு பெறவிருக்கின்றன.

அந்த மானியம், வரும் ஜனவரி மாதம் தொடங்கும்.

உலகிலேயே அத்தகைய மானியத் திட்டம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்-முறை என வாரியம் கூறியது.

எத்தகைய அளவிலான நிறுவனங்களும் ஆதரவுக்குத் தகுதிபெறலாம்.

சிறிய, நடுத்தர நிறுவனங்களும் கடனுதவியை எளிதாகப் பெற்றுக்கொள்ள, பசுமை, நீடித்த நிலைத்தன்மை தொடர்பான கடன் கட்டமைப்பை உருவாக்கவும் வங்கிகளை அந்த மானியத் திட்டம் ஊக்குவிக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்