Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

DBS-இன் மின்னிலக்கச் சேவையில் தடை - நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும்: சிங்கப்பூர் நாணய வாரியம்

DBS நிறுவனம் மீது 'தகுந்த மேற்பார்வை நடவடிக்கை' எடுப்பது குறித்துப் பரிசீலிக்கப்படுமெனச் சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

DBS நிறுவனம் மீது 'தகுந்த மேற்பார்வை நடவடிக்கை' எடுப்பது குறித்துப் பரிசீலிக்கப்படுமெனச் சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்துள்ளது.

DBS-இன் மின்னிலக்கச் சேவையில் உள்ள தடை தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடித்துள்ள நிலையில் அத்தகவல் வெளிவந்துள்ளது.

"இது மோசமான தடை. தடை ஏற்பட்டதற்கான மூலக் காரணத்தை அடையாளம் காண நிறுவனம் விரிவான புலனாய்வை மேற்கொள்ளும் என்று வாரியம் எதிர்பார்க்கிறது. தேவையான சீரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும்," என்று வாரியம் வலியுறுத்தியது.

புலனாய்வுக்குப் பிறகு தகுந்த மேற்பார்வை நடவடிக்கைகளை எடுப்பது பற்றிப் பரிசீலிக்கவிருப்பதாகவும் வாரியம் சொல்லிற்று.

நேற்று (நவம்பர் 23) காலையில் DBS, POSB வங்கிகளின் மின்னிலக்கச் சேவைகளில் இடையூறு ஏற்பட்டது.

இன்று காலை சேவைகள் செயல்படத் தொடங்கியதாக வங்கி சொன்னது.

என்றாலும் கோளாறு மீண்டும் நேரிட்டது.

தடைக்குப் பயனீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் கணினி ஆணைத்தொடரில் (access control server) ஏற்பட்ட கோளாறு காரணமென்று DBS கூறியதாக ஆணையம் தெரிவித்தது.

-CNA/ad

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்