Images
  • MAS
    கோப்புப் படம்: AFP/Roslan Rahman

சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பைச் சற்றே உயர்த்த சிங்கப்பூர் நாணய வாரியம் அனுமதி

சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு சற்றே அதிகரிக்க அனுமதிப்பதாய் சிங்கப்பூர் நாணய வாரியம் கூறியிருக்கிறது.

வாரியத்தின் நாணயக் கொள்கையில் சிறிதளவு திருத்தம் செய்திருப்பதால் அது சாத்தியம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு வாரியம் இரண்டாவது முறையாக நாணயக் கொள்கையைக் கடுமையாக்கியுள்ளது.

3ஆம் காலாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்திருப்பதாய் வர்த்தக, தொழில் அமைச்சின் முன்னோடி மதிப்பீடுகள் கூறும்வேளையில், வாரியத்தின் அறிவிப்பு வெளியானது.

ஆண்டு அடிப்படையில், இந்த வருடத்தின் 3ஆம் காலாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி 4.1 விழுக்காட்டிலிருந்து 2.6 விழுக்காடாகக் குறையும் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன.

வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படுத்துவதற்குப் பதில், நாணய மதிப்பின் மூலம் பொருளியலை நிர்வகிப்பதாய் வாரியம் தெரிவித்தது.


Top