Images
  • MAS (1)
    (படம்: Gaya Chandramohan)

மின் கட்டண முறையில் ஏற்படும் தவறுகளால் பாதிக்கப்படுவோருக்கு உதவி: சிங்கப்பூர் நாணய வாரியம்

சிங்கப்பூர் நாணய வாரியம், மின் கட்டண முறையில் ஏற்படும் தவறுகளால் பாதிக்கப்படுவோருக்கு உதவும் வகையில், நிதி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டிக் குறிப்புகளைப் பரிந்துரைத்துள்ளது.

மின் கட்டண முறையில் ஏற்படும் தவறுகளாலும், மோசடிகளாலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களும், சிறிய நிறுவனங்களும், பணத்தைத் திரும்பப் பெற அது வகைசெய்யும்.

அதுகுறித்துப் பொதுமக்களின் கருத்தை அறியவும் வாரியம் முன்வந்துள்ளது.

அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை பொதுமக்களும், துறை சார்ந்த நிறுவனங்களும், அந்த விவகாரத்தின் தொடர்பில் கருத்துகளைப் பதிவு செய்யலாம்.

இந்த ஆண்டின் முதற்பாதிக்குள் அந்தப் பரிந்துரைகளை நடப்புக்குக் கொண்டுவருவது திட்டம்.

தற்போது, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதன் தொடர்பில் தரநிலைப்படுத்தப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகள் ஏதும் நடப்பில் இல்லை.

மின் கட்டண முறையில் தவறு நேர்ந்தால், வங்கிகள் அவற்றின் சொந்த நடைமுறைகளைப் பின்பற்றி நிலைமையைக் கையாள்கின்றன.
 

உங்கள் கருத்து

Top