Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உற்பத்தி, பயனீட்டு முறைகளில் அணுகுமுறை மாறவேண்டும்: சுற்றுப்புற, நீர்வள அமைச்சர்

உற்பத்தி, பயனீட்டு முறைகளில் அணுகுமுறை மாறவேண்டியிருப்பதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
உற்பத்தி, பயனீட்டு முறைகளில் அணுகுமுறை மாறவேண்டும்: சுற்றுப்புற, நீர்வள அமைச்சர்

படம்: சுற்றுப்புற, நீர்வள அமைச்சு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

உற்பத்தி, பயனீட்டு முறைகளில் அணுகுமுறை மாறவேண்டியிருப்பதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.

பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் பழக்கத்தை மாற்றி மறுபயனீடு செய்யும் பழக்கத்தைப் பின்பற்றவேண்டும் என்றார் அவர்.

நைரோபியில் UNEA எனப்படும் ஐக்கிய நாட்டு நிறுவன சுற்றுச்சூழல் கூட்டத்தின்போது அவர் அதனைத் தெரிவித்தார்.

கழிவுகளற்ற ஆண்டு என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் உற்பத்தியையும் பயன்பாட்டையும் குறைப்பதை சிங்கப்பூர் ஊக்குவிக்கிறது.

பயன்படுத்தப்பட்ட தண்ணீரையும் திடக் கழிவுகளையும் சுத்திகரிக்கும் உலகின் முதல் ஒருங்கிணைந்த துவாஸ் நெக்சஸ் ஆலை பற்றியும் திரு. மசகோஸ் பேசினார்.

சிங்கப்பூரில் சென்ற ஜனவரியில் நடைபெற்ற ஆசிய பசிபிக் வட்டாரத்தின் அமைச்சர்கள், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கலந்துகொண்ட மூன்றாம் கருத்தரங்கு, சுற்றுப்புறம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் அமைந்ததை அவர் சுட்டினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்