Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இஸ்லாமிய சமய போதகர்கள் சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றுதை உறுதிசெய்யும் நடைமுறைகள் நடப்பில் உள்ளன: முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்புவகிக்கும் அமைச்சர்

அசாட்டிஸா அங்கீகாரத் திட்டத்தின்கீழ் வரும் இஸ்லாமிய சமய போதகர்கள் அனைவரும் சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றுதை உறுதிசெய்யும் நடைமுறைகள் நடப்பில் உள்ளதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்புவகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
இஸ்லாமிய சமய போதகர்கள் சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றுதை உறுதிசெய்யும் நடைமுறைகள் நடப்பில் உள்ளன: முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்புவகிக்கும் அமைச்சர்

(படம்: CNA)

அசாட்டிஸா அங்கீகாரத் திட்டத்தின்கீழ் வரும் இஸ்லாமிய சமய போதகர்கள் அனைவரும் சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றுதை உறுதிசெய்யும் நடைமுறைகள் நடப்பில் உள்ளதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்புவகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.

அவர்களின் வேலைத் தகுதி நிர்ணயிப்புக் காலம், நேர்காணல், பயிற்சி போன்றவை அதில் அடங்கும்.

சிங்கப்பூரரான முன்னைய சமய போதகர் ஒருவருக்கும் அவரது மாணவருக்கும் சென்ற மாதம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

நாட்டின் நல்லிணக்கத்தைக் கீழறுக்கும் வகையிலான நம்பிக்கையைக் கொண்டிருந்ததற்காக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அசாட்டிஸா திட்டத்திற்குத் தகுதியற்றவர் என்பதைக் காட்டும் விதத்தில் யாரும் நடந்துகொண்டால், அவர்களின் அசாட்டிஸா அங்கீகாரத் தகுதி ரத்து செய்யப்படும் என்று திரு. மசகோஸ் குறிப்பிட்டார்.

முயிஸ் எனப்படும் இஸ்லாமியச் சமய மன்றமும் அசாட்டிஸா அங்கீகாரக் கழகமும் அவ்வப்போது நிலைமையைக் கண்காணிக்கும்.

அசாட்டிஸா சமூகத்திற்கு ஆதரவளிப்பது திட்டத்தின் நோக்கம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சமய போதகர்கள் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பதோடு அமைதி, இணக்கத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றும் விதத்திலும் நடந்துகொள்வதை உறுதிசெய்வது அசாட்டிஸா அங்கீகாரத் திட்டத்தின் நோக்கம் என்று திரு. மசகோஸ் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்