Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காரை அன்று ஓட்டவே இல்லை - குற்றஞ்சாட்டப்பட்ட மசராட்டி ஓட்டுநர்

காவல்துறை அதிகாரியை இழுத்துக்கொண்டே காரைச் செலுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் மசராட்டி கார் ஓட்டுநர் அன்றைய தினம் தான் காரைத் தொடவே இல்லை எனக் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
காரை அன்று ஓட்டவே இல்லை - குற்றஞ்சாட்டப்பட்ட மசராட்டி ஓட்டுநர்

(படம்: Najeer Yusof/TODAY)

காவல்துறை அதிகாரியை இழுத்துக்கொண்டே காரைச் செலுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் மசராட்டி கார் ஓட்டுநர் அன்றைய தினம் தான் காரைத் தொடவே இல்லை எனக் கூறியுள்ளார்.

அவர் ஒரு காவல்துறை அதிகாரியைக் காரோடு சேர்த்து இழுத்துச்சென்றது கேமராவில் பதிவாகியிருந்தது.

ஆனால் காரை அன்று சிங்கப்பூரில் தான் ஓட்டவே இல்லை என்று அவர் கூறினார்.

35 வயது லீ செங் யான் பயன்படுததப்பட்ட மசராட்டி காரை 175ஆயிரம் வெள்ளிக்கு வாங்கினார்.

சம்பவம் நடந்த 2017 நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒரு வாரம் முன்புதான் காரை வாங்கியதாக அவர் சொன்னார்.

காரை வாங்கும்போது அதை ஓட்டிச் சோதித்துப் பார்க்கவில்லை, வாங்கும் நேரத்தில் காரைப் பார்க்கக்கூட இல்லை என்றார் அவர்.

காரை 'கெல்வின்' என்ற பெயருடைய தனது நண்பர் பயன்படுத்துவதற்காகக் கொடுத்ததாகவும் அந்த நண்பர் தன்னைப் போன்றே உடல்வாகு கொண்டவர் என்றும் லீ நீதிமன்ற விசாரணையில் சொன்னார்.

ஆனால் கெல்வின் என்ற ஒரு நபரே இல்லை என்றும் லீ சொன்னது பொய் என்று தெளிவாகத் தெரிவதாகவும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்