Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தானியக்க இயந்திரங்களில் முகக் கவசங்களை முறைகேடாகப் பெற்ற சந்தேகத்தின்பேரில் ஆடவர் கைது

தானியக்க இயந்திரங்களில் முகக் கவசங்களை முறைகேடாகப் பெற்ற சந்தேகத்தின்பேரில் ஆடவர் கைது 

வாசிப்புநேரம் -

அரசாங்கம் இலவசமாக வழங்கும் முகக் கவசங்களைத் தானியக்க இயந்திரங்களில் இருந்து முறைகேடாகப் பெற்ற சந்தேகத்தின்பேரில், 32 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சட்டவிரோதமாகப் பெறப்பட்ட தனிநபர் தகவல்களைக் கொண்டு அவர், அந்த முகக் கவசங்களைப் பெற்றதாக நம்பப்படுகிறது.

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், தானியக்க இயந்திரத்தில் இருந்து, தங்களால் முகக் கவசங்களைப் பெறமுடியவில்லை எனப் புகார் செய்திருந்தனர்.

காவல்துறை அதுபற்றி ஆராய்ந்தபோது, ஏற்கெனவே அவர்களின் பெயரில் முகக் கவசங்கள் பெறப்பட்டிருந்தன.

முதற்கட்டப் புலனாய்வில் சந்தேக நபர், சீமெய் ஸ்டீரீட் 2-இல் உள்ள 24 மணி நேரத் தானியக்க இயந்திரத்திலிருந்து 200 முகக் கவசங்களைப் பெற்றது தெரியவந்தது.

ஆள்சேர்ப்பு நிறுவனமொன்றில் முன்பு வேலைபார்த்துவந்த ஆடவர், அப்போது திரட்டிய தனிநபர் தகவல்களைக் கொண்டு அந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

சட்ட விரோதமாகப் பெற்ற தனிநபர் தகவல்களை வைத்திருந்தது, அவற்றைக் கொண்டு ஏமாற்றியது ஆகிய குற்றச்சாட்டுகள், அவர் மீது இன்று நீதிமன்றத்தில் சுமத்தப்படும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்