Images
  • rain may
    (படம்:AFP/Roslan Rahman)

மே பிற்பாதியில் மேலும் மழை

சிங்கப்பூரில் இந்த மாதத்தின் பிற்பாதியில் மேலும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

வானிலை வெப்பமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வகம் கூறியது. 

அடுத்த இரண்டு வாரத்தில், சுமார் ஆறிலிருந்து எட்டு நாட்களுக்குக் காலை, மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை குறுகிய நேரத்துக்குப் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆண்டின் மிக வெப்பமான மாதங்களில் மே மாதமும் ஒன்று.

அடுத்த இரண்டு வாரத்தில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக வெப்பநிலை மாலை வேளைகளில் 35 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

Top