Images
  • sg covid work

மருத்துவ விடுப்பு, ஊழியரின் முக்கிய செயல்திறன் குறியீட்டில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுமா? அதற்கான சட்டங்கள்?

ஊழியர்கள் எடுக்கக்கூடிய மருத்துவ விடுப்பு, வேலை நியமனச் சட்டத்தின் கீழ் ஒருவரின் அடிப்படை உரிமை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) கூறியுள்ளார்.

ஊழியர்கள், மருத்துவர்களிடம் சென்று மருத்துவ விடுப்புப் பெற்றால், முதலாளிகள் அவர்களை ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு எதிர்பார்க்கிறது என்றும் அவர் சொன்னார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவ்வாறு எழுத்துபூர்வமாகப் பதிலளித்த டாக்டர் டான், ஊழியர்களும் நேரத்துடன் தாங்கள் மருத்துவ விடுப்பில் இருப்பது குறித்து முதலாளிகளிடம் தெரியப்படுத்தவேண்டும் என்றும் சொன்னார்.

ஊழியர்களின் செயல்திறனை நியாயமான வழிகளில் மதிப்பிடவேண்டும் என்றும் டாக்டர் டான் வலியுறுத்தினார்.

ஒருவரின் முழுமையான செயலாற்றல், அவர் எவ்வாறு வேலை செய்கிறார், நிறுவனத்துக்கு எந்தெந்த வழிகளில் பங்களித்துள்ளார் என்று அனைத்தையும் கருத்திற்கொண்டு மதிப்பிடுவதே சிறப்பு என அவர் குறிப்பிட்டார்.

ஒருவர் ஆண்டுக்கு எத்தனை நாள்களுக்கு மருத்துவ விடுப்பில் இருந்திருக்கிறார் என்பதை செயல்திறன் குறியீட்டின் ஓர் அம்சமாகப் பயன்படுத்துவது தவறென முத்தரப்புக் குழுவினர் கருதுகின்றனர்.
 

Top