Images
  • McDonald's Outfit
    (படம்: McDonald's)

McDonald's ஆடைகள் - ஆர்வத்துடன் திரண்ட மக்களுக்கு ஏமாற்றம்


McDonald's அறிமுகம் செய்த இரவு ஆடையின் விற்பனை காரணமாக அதன் செயலியும் இணையத்தளமும் ஒரு மணிநேரத்தில் முடங்கின.

McDonald's, அதன் McNuggets, McWings உணவுப் பொருள்களுடன் சிறப்பு McDonald's இரவு ஆடைகளை அறிமுகம் செய்திருந்தது.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அந்த ஆடைகளின் விற்பனை திங்கட்கிழமை (அக்டோபர் 7) மாலை 6 மணிக்குத் தொடங்கியது.

விற்பனை தொடங்கிய ஒரு மணிநேரத்துக்குள் McDonald'sஇன் இணையத்தளமும் செயலியும் முடங்கியதாக அதன் Facebook பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆடைகளை வாங்குவதில் இடையூறு ஏற்பட்டதால் பல வாடிக்கையாளர்கள் தங்கள் அதிருப்தியை Facebookஇல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஆடைகளை வாங்குவதற்கான முன்பதிவுக்கு இணையப்பக்கம் ஒன்றை வெள்ளிக்கிழமைக்குள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக McDonald's தெரிவித்துள்ளது.

 

Top