Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

MCE விரைவுச்சாலையில் வடிந்த நீர், நீர்த்தெளிப்பானில் இருந்து வந்தது: நிலப் போக்குவரத்து ஆணையம்

MCE எனும் மரினா கரையோர விரைவுச்சாலையின் சுரங்கப்பாதையில் வடிந்த நீர், உடைந்த குழாயில் இருந்து வந்ததோ கடல்நீர்க் கசிவோ இல்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
MCE விரைவுச்சாலையில் வடிந்த நீர், நீர்த்தெளிப்பானில் இருந்து வந்தது: நிலப் போக்குவரத்து ஆணையம்

படம்: FB/Screengrab

MCE எனும் மரினா கரையோர விரைவுச்சாலையின் சுரங்கப்பாதையில் வடிந்த நீர், உடைந்த குழாயில் இருந்து வந்ததோ கடல்நீர்க் கசிவோ இல்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருக்கிறது.

சுரங்கப்பாதையில் நீர் வடியும் காணொளி தற்போது இணையத்தில் பரவிவருகிறது.

அந்தச் சம்பவம் தொடர்பாக ஆணையம் அதன் Facebook பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.

தவறுதலாக சுரங்கப்பாதையில் உள்ள நீர்த்தெளிப்பான் முறை செயல்படுத்தப்பட்டதால் நீர் வடியத் தொடங்கியதாக ஆணையம் கூறியது.

தற்போது அந்தத் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்