Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மொழிபெயர்ப்புகளில் உள்ள தவறுகளைக் களைவதில், குடிமக்கள் அதிகமானோர் முன்வந்து பங்களிக்க வேண்டும்'

மொழிபெயர்ப்புகளில் உள்ள தவறுகளைக் களைவதில், குடிமக்கள் அதிகமானோர் தாமாக முன்வந்து பங்களிக்க வேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சு விரும்புகிறது.

வாசிப்புநேரம் -

மொழிபெயர்ப்புகளில் உள்ள தவறுகளைக் களைவதில், குடிமக்கள் அதிகமானோர் தாமாக முன்வந்து பங்களிக்க வேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சு விரும்புகிறது.

மொழிபெயர்த்து வெளியிடப்படும் அறிக்கைகள் பிழையின்றி இருப்பதை உறுதி செய்யும் கூட்டு ஆற்றலை வலுப்படுத்த வேண்டும் என்று மூத்த துணையமைச்சர் சிம் ஆன் (Sim Ann) வலியுறுத்தினார்.

அரசாங்கம் வெளியிடும் மொழிபெயர்ப்பு அறிக்கைகளின் அளவு அதிகரித்துள்ளது. மாதந்தோறும் சராசரியாக 300,000க்கும் மேற்பட்ட வார்த்தைகள் மொழி பெயர்க்கப்படுவதாக அவர் சுட்டினார்.

மொழிபெயர்ப்புக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், வேகமாக வேலை செய்ய வேண்டிய சூழலிலும், அது சரியான மொழிபெயர்ப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

சென்ற ஆண்டு ஜூலையிலிருந்து, தொடர்பு, தகவல் அமைச்சு மொழிபெயர்ப்புப் பணிக்குத் தன்னார்வலர்களைச் சேர்த்து வருகிறது.

அதன்படி, 83 பேர் அமைச்சுடன் இணைந்து செயல்படுகின்றனர்.

அவர்களில், மாண்டரின் மொழிக்கு 53 பேர், மலாய் மொழிக்கு 22 பேர், தமிழுக்கு 13 பேர் இருப்பதாகத் திருவாட்டி ஆன் கூறினார்.

இன்னும் அதிகமானோர் தன்னார்வமாக மொழிபெயர்ப்புப் பணியில் தோள் கொடுக்க முன்வருவர் என்று தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்