Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முழுக்க முழுக்க இறைச்சி இல்லாத 'பன்றி இறைச்சி'- ஆண்டிறுதிக்குள் சிங்கப்பூரில்

Impossible Foods நிறுவனம், இறைச்சி இல்லாத "பன்றி இறைச்சி"-யைத் தயாரித்துள்ளது.

வாசிப்புநேரம் -

Impossible Foods நிறுவனம், இறைச்சி இல்லாத "பன்றி இறைச்சி"-யைத் தயாரித்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ளது அந்த நிறுவனம்.

அது, முதன்முதலாக இன்று அதை நியூயார்க்கிலுள்ள Momofuku Ssam Bar என்ற உணவகத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.

முழுக்க முழுக்கக் காய்கறிவகைகளால் செய்யப்பட்ட அந்த "பன்றி இறைச்சி"-யை, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகியவற்றில் கூடிய விரைவில் விநியோகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த மாதம் 4ஆம் தேதி முதல், அந்த வகை இறைச்சி, ஹாங்காங்கில் உள்ள 120 உணவகங்களில் விற்கப்படும். கொத்திய பன்றி இறைச்சிக்குப் பதிலாக அது பயன்படுத்தப்படலாம்.

ஹாங்காங்கிலுள்ள மளிகைக் கடைகளிலும், உடனடியாக உண்ணக் கூடிய உணவுவகைகளின் கீழ் அது விற்கப்படும்.

இருப்பினும், உண்மையான பன்றி இறைச்சியைவிட, Impossible Foods நிறுவனத்தின் தயாரிப்பிலான பன்றி இறைச்சியின் விலை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டின் இறுதியில் அது, சிங்கப்பூரில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்