Images
  • singapore

Asian Academy Creative நிகழ்ச்சியில் மீடியாகார்ப்பிற்கு 5 விருதுகள்

சிங்கப்பூர்: முதன்முறையாக நடைபெற்ற Asian Academy Creative விருது நிகழ்ச்சியில், மீடியாகார்ப் 5 பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளது.

விருது விவரங்கள்:

சிறந்த இயக்கம்: Douglas Lan, National Service - The Beginning, சேனல் நியூஸ்ஏஷியா

சிறந்த திரைவசனம்: M Raihan Halim, SR115, சூரியா ஒளிவழி

சிறந்த நகைச்சுவைப் படைப்பாளர்: Jeremy Chan, My Agent is a Hero, Toggle

சிறந்த புதிர்/விளையாட்டுப் போட்டி: We are Singaporeans: Global Edition, ஒளிவழி 5

சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி:Unstoppable Dreams, ஒக்டோ ஒளிவழி

நேற்றும் (டிசம்பர் 7), முன் தினமும் நடைபெற்ற விருது நிகழ்ச்சி இவ்வாண்டின் சிங்கப்பூர் ஊடக விழாவின் முக்கிய அங்கங்களில் ஒன்று. சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா உட்பட 20 நாடுகளின் படைப்புகளுக்கு 47 விருதுகள் வழங்கப்பட்டன.

தேசிய அளவில் வழங்கப்பட்ட 47 விருதுகளில் 29 விருதுகளை மீடியாகார்ப்பின் ஒளிவழிகள் 5, 8, U, சூரியா, வசந்தம், ஒக்டோ, சேனல் நியூஸ்ஏஷியா ஆகியவை தட்டிச் சென்றன. சிங்கப்பூரில் தேசிய அளவில் வென்ற படைப்புகள் பின்னர் மற்ற நாடுகளில் தேசிய அளவில் வென்ற படைப்புகளுடன் இறுதிச் சுற்றில் போட்டியிட்டன.

நிகழ்ச்சியில் ஆக அதிக விருதுகளை வென்ற பெருமை சிங்கப்பூரையும், இந்தியாவையும் சாரும்.

Top