Images
  • mediacorp

நியூயார்க் தொலைக்காட்சி, திரைப்பட விருது விழாவில் மீடியாகார்ப் நிறுவனத்திற்கு 22 விருதுகள்

மீடியாகார்ப் (Mediacorp) நிறுவனம், இவ்வாண்டின் நியூயார்க் தொலைக்காட்சி, திரைப்பட விருது விழாவில் 22 விருதுகளை வென்றுள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை CNA தயாரித்த ஆவணப்படங்களுக்கு வழங்கப்பட்டன.

ஒளிவழி 8 தயாரித்த 'Tuesday Report - Streets of Memory 3' என்ற நிகழ்ச்சிக்குச் சிறந்த வரைகலைக்கான தங்க விருது வழங்கப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள குறிப்பிட்ட ஐந்து சாலைகளின் பெயருக்கான காரணத்தை நிகழ்ச்சி ஆராய்ந்தது.

22 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கல விருதுகளுடன் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றதற்காக 37 மதிப்புமிக்க அங்கீகாரங்களும் மீடியாகார்ப் நிறுவனத்திற்குக் கிடைத்தன.

40க்கும் அதிகமான நாடுகளிலிருந்து விருதுகளுக்கு நியமனங்கள் பெறப்பட்டன.

Top