Images
  • mediacorp build

உலக ஊடக விழாவில் மீடியாகார்ப்புக்கு 14 விருதுகள்

மீடியாகார்ப் நிறுவனம் உலக ஊடக விழாவில் 14 விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.

செய்தி பிரிவிலும் ஆவணப்படப் பிரிவிலும் அது 6 தங்கப் பதக்கங்களையும் 7 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றது.

மீடியாகார்ப்பின் CNA, தொடர்ந்து அதன் கடின உழைப்பிற்காக அங்கீகாரம் பெற்று வருவது பெருமைக்குரியது என்றார் மீடியாகார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி தாம் லோக் கெங்.

மீடியாகார்ப் பெற்ற விருதுகள் அதன் சிறந்த படைப்புத் திறனையும் நிகழ்சிகளைத் தயாரிக்கும் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

உலகெங்கும் தொலைக்காட்சி, அச்சு, இணைய ஊடகங்களில் வெளியான சிறந்த படைப்புகள், 2000ஆம் ஆண்டு முதல் உலக ஊடக விழாவில் கௌரவிக்கப்பட்டு வருகின்றன.

 

Top