Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மீடியாகார்ப்பின் ஒளிவழி ஐந்தும் ஆக்டோவும் இணைகின்றன

மீடியாகார்ப் அதன் இரண்டு ஆங்கில ஒளிவழிகளை ஒன்றாக இணைக்கவுள்ளது.  

வாசிப்புநேரம் -

மீடியாகார்ப் அதன் இரண்டு ஆங்கில ஒளிவழிகளை ஒன்றாக இணைக்கவுள்ளது.

வரும் மே மாதம் முதல், ஒளிவழி ஐந்தும் ஆக்டோவும் ஒன்றாகச் செயல்படவுள்ளன.

ஒளிவழி ஐந்திலும் ஆக்டோவிலும் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு குடும்பங்களுக்கு ஏற்ற ஆங்கில ஒளிவழியாக, ஒளிவழி ஐந்து செயல்படும்.

சிறுவர் நிகழ்ச்சிகளிலும், முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் அது தொடர்ந்து கவனம் செலுத்தும்.

ஒளிவழி ஐந்தில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் மீடியாகார்ப்பின் மின்னிலக்கச் சேவையான Toggle-தளத்திலும் கிடைக்கும்.

இந்த முடிவு, உள்ளூர்த் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தை பாதிக்காது என மீடியாகார்ப் நிறுவனம் குறிப்பிட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்