Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலை வாய்ப்புகள்.... மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு இணையம் வழி நடத்திய கலந்துரையாடல்

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் "எதிரொலி" குழு சிங்கப்பூரில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடலை நடத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் "எதிரொலி" குழு சிங்கப்பூரில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடலை நடத்தியுள்ளது.

கிருமிப்பரவல் சூழலில், இணையம் வழியே முதன்முறையாக அத்தகைய கலந்துரையாடலுக்கு அது ஏற்பாடு செய்தது.

சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு, சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழிற்சபைத் தலைவர் T சந்துரு, ஒலி 96.8 வானொலி மூத்த படைப்பாளர் முகமது ரஃபி உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.

கிருமித்தொற்றுச் சூழலில், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அவை எப்படி சமாளிக்கப்படுகின்றன என்பது குறித்து பகிர்ந்துகொண்டார் முனைவர் சந்துரு.

கிருமித்தொற்றுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கிடைக்கும் வாய்ப்புகள் வேறுபடுகின்றன. எதிர்பார்ப்புகளும் மாறியுள்ளன. மின்வர்த்தகத்தைப் பற்றிதான் அனைவரும் பேசுகிறார்கள். நிறுவனங்கள் மின்வர்த்தகத்திற்கு மாறவில்லை என்றால் அவற்றின் வியாபாரம்தான் பாதிப்படையும். 

என்று அவர் சொன்னார்.

தற்போதுள்ள சூழலில் சிங்கப்பூரர்களிடையே உள்ள வேலை இழப்பு குறித்த அச்சம், குடும்பத்தையே பாதிக்கலாம். எனவே கூடுதல் கவனம் தேவை என்கிறார் திரு. அன்பரசு.

குடும்பத்தின் பொருளியல் நிலையில் சரிவு ஏற்படும்போது,மன உளைச்சல் ஏற்படலாம், பிள்ளைகளின் தன்முனைப்பு குறையலாம்... பல சிக்கல்கள் ஏற்படலாம். அவற்றுக்கு தீர்வுக்காண, மக்கள் மாற்று வேலைகளை நாடலாம். 

என்று அவர் சொன்னார்.

வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் பிரச்சினைகள், அவற்றிலிருந்து மீண்டும்வரும் வழிகள் ஆகியன குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்