Images
  • mediacorp

வாண வேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்கும் Mediacorp நிறுவனத்தின் 'Let’s Celebrate 2021' நிகழ்ச்சி

புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு Mediacorp நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

Let’s Celebrate 2021 என்றழைக்கப்படும் நிகழ்ச்சியில், வண்ண விளக்குகள், வாண வேடிக்கை எனப் பல்வேறு கண்கவர் அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் புத்தாண்டை வரவேற்கும் தருணத்தை ஒளிப்பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.

பின்னர் அந்தக் காணொளிகளைச் சமூக ஊடகங்களில் #SGTogetherABetter21 எனப் பதிவிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.

டிசம்பர் 31ஆம் தேதியன்று இரவு பத்தரை மணிக்கு Let’s Celebrate 2021 நிகழ்ச்சியை meWATCH, ஒளிவழி 5, Mediacorp Entertainment-இன் YouTube பக்கம் ஆகியவற்றில் கண்டுகளிக்கலாம்.

அதன் மறுஒளிபரப்பு புத்தாண்டு தினத்தன்று ஒளிவழி 5-இல் இடம்பெறும். 

Top