Images
  • prop

மெய்நிகர் சொத்துக் கண்காட்சி - PropNex, 99.co நிறுவனங்களுடன் இணையும் மீடியாகார்ப்

சொத்து முகவர் நிறுவனம் PropNex, சொத்து முகவர் இணையத்தளம் 99.coவுடன் ஆகியவற்றுடன் இணைந்து மெய்நிகர் சொத்துக் கண்காட்சி நடத்த மீடியாகார்ப் ஏற்பாடு செய்கிறது.

அடுத்த மாதம் 10லிருந்து டிசம்பர் 4ஆம் தேதி வரை நடத்தப்படும் Singapore Property Show 2020 கண்காட்சியில் சுமார் 20 புதிய குடியிருப்புத் திட்டங்கள் இடம்பெறும்.

கண்காட்சியில், ஒவ்வொரு வீட்டையும் மெய்நிகர் முறையில் 99.co தளத்தில் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ஒரே இடத்திலிருந்து பல வீடுகளைப் பாதுகாப்பாகச் சுற்றிப்பார்க்கக் கண்காட்சி வகைசெய்யும் என்றார் 99.coவின் தலைமை நிர்வாக அதிகாரி.

சொத்து வாடகையைக் கணக்கிடும் முறைகள், சொத்துச் சந்தையைப் பற்றிய காணொளிகள் போன்றவையும் கண்காட்சியில் இடம்பெறும்.

சொத்து முதலீட்டு உத்திகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வாரந்தோறும் இணையப் பயிலரங்குகளும் நடத்தப்படும்.

வாடிக்கையாளர்களுக்குப் பலதரப்பட்ட சொத்து வாய்ப்புகளைக் கொண்டுவர கண்காட்சி ஊக்குவிப்பதாக PropNex நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டார்.

ஒரே தளத்தில் நம்பகமான தகவல், நிபுணத்துவ ஆலோசனையைப் பெற்று சொத்து வாங்கவிருப்பவர்கள் நல்ல முடிவுகளை எடுக்க சொத்துக் கண்காட்சி உதவும் என்றார் மீடியகார்ப் மின்னிலக்க வர்த்தகப் பிரிவின் தலைமை அதிகாரி.

கண்காட்சி குறித்த மேல்விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.  

Top