Images
  • medical

57 வெளிநாட்டுப் பள்ளிகளின் அடிப்படை மருத்துவத் தகுதிச் சான்றிதழ்கள் சிங்கப்பூரில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா

வெளிநாடுகளில் 57 பள்ளிகள் வழங்கும் அடிப்படை மருத்துவத் தகுதிச் சான்றிதழ்கள், அடுத்த ஆண்டுமுதல் சிங்கப்பூரில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 103 வெளிநாட்டுப் பள்ளிகளின் மருத்துவத் தகுதிச் சான்றிதழ்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும்.

அந்தப் பட்டியல் 2003ஆம் ஆண்டியில் இருந்து 6 முறை மறுஆய்வு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் மூப்படையும் மக்கள்தொகையின் அதிகரித்துவரும் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்ய மறுஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் மருத்துவ மன்றமும் அதனைத் தெரிவித்தன.

சிங்கப்பூரில் மருத்துவப் பயிற்சி பெறும் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Top