Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மருத்துவர்களுக்கு எதிரான புகார்கள் இனி துரிதமாக கையாளப்படும்

மருத்துவர்களுக்கு எதிரான புகார்கள் இனி துரிதமாகவும் மேம்பட்ட வகையிலும் கையாளப்படும்.

வாசிப்புநேரம் -
மருத்துவர்களுக்கு எதிரான புகார்கள் இனி துரிதமாக கையாளப்படும்

(படம்: AFP)

மருத்துவர்களுக்கு எதிரான புகார்கள் இனி துரிதமாகவும் மேம்பட்ட வகையிலும் கையாளப்படும்.

மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு முன்னதாக நோயாளிகளின் ஒப்புதலைப் பெறுவது குறித்த சட்டரீதியான கோட்பாடுகள் மேலும் தெளிவாக வகுக்கப்படும்.

மருத்துவத் துறையின் ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகளை மேம்படுத்த சிங்கப்பூர் மருத்துவ மன்றத்திடம் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் அவை அடங்கும்.

Cortisone எனும் மருந்தின் பின்விளைவுகள் பற்றி நோயாளியிடம் முன்கூட்டியே தெரிவிக்கத் தவறிய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லிம் லியென் ஆர்னுக்கு (Lim Lian Arn) சிங்கப்பூர் மருத்துவ மன்றம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிகபட்சமான 100,000 வெள்ளி அபராதம் விதித்திருந்தது.

அபராதம் விதிக்கப்பட்ட பிறகு மருந்தின் விலை 100 வெள்ளியிலிருந்து 1,100 வெள்ளிக்கு அதிகரித்தது.

சிலர் அந்த மருந்தை வழங்குவதை முற்றிலுமாக நிறுத்தினர்.

இது, மருத்துவ மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய சுகாதார அமைச்சைத் தூண்டியது.

அதற்காக சிறப்புப் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

மருத்துவ சிகிச்சைக்கு முன்னதாகப் பெறப்படும் நோயாளிகளின் ஒப்புதல், சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகள் ஆகிய இரு அம்சங்கள் தொடர்பிலான பரிந்துரைகளை குழு முன்வைத்தது.

மருத்துவர்கள் தங்களின் ஆலோசனைகளை இடையூறு இல்லாமல் வழங்கும் சூழல் இருக்கவேண்டும்.

மருத்துவர்களுக்கு எதிராக ஏதேனும் புகார் தொடுக்கப்பட்டால், நியாயமான, ஒளிவுமறைவு இல்லாத வகையில் மன்றம் முடிவெடுக்க வேண்டும்.

அதற்குப் புதிய நடைமுறைகள் வழியமைக்கும் என்பதை மருத்துவர்கள் அறிந்திருக்கவேண்டும் என்று சுகாதாரத்துக்கான மூத்த துணையமைச்சர் எட்வின் தொங் (Edwin Tong) கூறினார்.

குழுவின் பரிந்துரைகளை அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்