Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தகுதிபெறும் மூத்தோருக்கு அடுத்த மாதம் $270 மில்லியன் MediSave மருத்துவச் சேமிப்பு நிரப்புத் தொகை

முன்னோடித் தலைமுறை, மெர்டேக்கா தலைமுறை ஆகியவற்றைச் சேர்ந்த தகுதிபெறும் மூத்தோர், மொத்தம் 270 மில்லியன் வெள்ளி MediSave மருத்துவச் சேமிப்பு நிரப்புத் தொகையை அடுத்த மாதம் பெறவிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
தகுதிபெறும் மூத்தோருக்கு அடுத்த மாதம் $270 மில்லியன் MediSave மருத்துவச் சேமிப்பு நிரப்புத் தொகை

(படம்: AFP)

முன்னோடித் தலைமுறை, மெர்டேக்கா தலைமுறை ஆகியவற்றைச் சேர்ந்த தகுதிபெறும் மூத்தோர், மொத்தம் 270 மில்லியன் வெள்ளி MediSave மருத்துவச் சேமிப்பு நிரப்புத் தொகையை அடுத்த மாதம் பெறவிருக்கின்றனர்.

சுகாதார அமைச்சும், நிதி அமைச்சும் அதனைத் தெரிவித்தன.

MediShield Life வாழ்நாள் மருத்துவக் காப்புறுதிச் சந்தாக் கட்டணத்தைச் செலுத்தவும், மற்ற MediSave மருத்துவச் சேமிப்பு அங்கீகாரம் பெற்ற காப்புறுதித் திட்டங்களுக்கும் அந்தத் தொகையை அவர்கள் பயன்படுத்தலாம்.

மருத்துவமனையில் தங்கிப் பெறும் சிகிச்சைகளுக்கும், மற்ற சில வெளிநோயாளிச் சிகிச்சைகளுக்கும் அந்த நிரப்புத் தொகையைப் பயன்படுத்த முடியும்.

அது குறித்துத் தகவல் அளிக்கும் கடிதத்தை மெர்டேக்கா தலைமுறையினர் ஏற்கனவே பெற்றிருப்பர்.

முன்னோடித் தலைமுறையினர் அது குறித்த கடிதத்தை அடுத்த வாரம் பெற்றுக்கொள்வர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்