Images
  • boat johor cm
    (படம்: Singapore Police Force)

சிங்கப்பூர்க் கடற்பகுதிக்குள் ஜொகூர் முதலமைச்சர் அத்துமீறி நுழைந்ததை அடுத்து, சிங்கப்பூர்-மலேசியா அமைச்சர்நிலைச் சந்திப்பு ஒத்திவைப்பு

சிங்கப்பூர்-மலேசியா இடையில் நடைபெறவிருந்த 14ஆவது 'இஸ்கந்தர் மலேசியா கூட்டு அமைச்சர்நிலைக் குழுக்களின் சந்திப்பு' ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜொகூர் முதலமைச்சர் ஒஸ்மான் சப்யான் (Osman Sapian), சென்ற புதன்கிழமையன்று சிங்கப்பூரின் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததால், சந்திப்பை இப்போது நடத்துவது ஏற்புடையதாக இருக்காது என்று அமைச்சு அறிக்கையில் கூறியது.

சிங்கப்பூர் நீரில் நிறுத்தப்பட்டிருந்த மலேசியாவிற்குச் சொந்தமான Pedoman கப்பலைக் காண (ஜனவரி 9-ஆம் தேதி) திரு ஒஸ்மான் வந்திருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட படங்களை அவர் தமது Facebook பக்கத்தில் பதிவு செய்தார்.

கடந்த அக்டோபர் மாதம் ஜொகூர் பாருவின் துறைமுக எல்லைகளை மலேசியா விரிவுபடுத்தியது.

அதனையடுத்து, கடந்த சில மாதங்களாக மலேசியாவிற்குச் சொந்தமான கப்பல்கள் அடுத்தடுத்துப் பல முறை சிங்கப்பூர் நீருக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.

Top