Images
  • Men Racing
    (படம்: TODAY)

லிம் சு காங் ரோட்டில் சட்டவிரோதமாகக் கார் பந்தயத்தில் ஈடுபட்ட இருவருக்குச் சிறை


சிங்கப்பூர்: லிம் சு காங் ரோட்டில் சட்டவிரோதமாகக் கார் பந்தயத்தில் ஈடுபட்ட ஆடவர்கள் இருவருக்கு ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களுக்கு 1,500 வெள்ளி அபராதமும் மூவாண்டு வாகனம் ஓட்டுவதற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளன.

37 வயது கோ சீ மிங் (Goh Tze Ming), 28 வயது கைருல்அன்வார் இஸ்மாயில் இருவரும்,(Khairulanwar Ismail) அடுத்த வாரம் சிறைத்தண்டனையைத் தொடங்குவர்.

டிசம்பர் 2016இல், அதிகாலை நேரத்தில் நடந்த பந்தயத்தைக் காண சுமார் 40 பேர் திரண்டிருந்தனர்.

மணிக்கு 70 கிலோமீட்டராக இருந்த சாலை வேகக் கட்டுப்பாட்டு வரம்பை மீறி அவர்கள் மணிக்குச் சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் சென்றனர்.

வேகக் கட்டுப்பாட்டு வரம்பை மீறி சட்டவிரோதமாகப் பந்தயத்தில் ஈடுபட்டதற்கு இருவருக்கும் அதிகபட்சம் ஆறு மாதச் சிறைத்தண்டனை, 2,000 வெள்ளி அபராதத்துடன் வாகனம் ஓட்டுவதற்கு ஓராண்டு வரை தடை விதிக்கப்பட்டிருக்கலாம்.


 

Top