Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வரவுசெலவுத் திட்டம் 2019 - மெர்டேக்கா திட்டம் குறித்த மக்களின் கருத்துகள்

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மெர்டேக்கா தலைமுறையினருக்குப் பல அனுகூலங்கள் அறிவிக்கப்பட்டன. 60 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத்திற்குத் தகுதிபெறுகின்றனர்.

வாசிப்புநேரம் -

அவர்களின் மெடிசேவ் மருத்துவச் சேமிப்புக் கணக்கில் இந்த ஆண்டிலிருந்து 2023 வரை ஆண்டுதோறும் 200 வெள்ளி நிரப்பப்படும்.

ஏற்கனவே வழங்கப்படும் பொருள், சேவை வரி பற்றுச்சீட்டு தவிர, அந்தத் தொகை கூடுதலாக வழங்கப்படும்.

PAssion Silver அட்டையில் ஒருமுறை 100 வெள்ளி நிரப்பப்படும்.

சமூக மன்றங்கள், பொது நீச்சல்குளங்கள், பொதுப் போக்குவரத்து எனப் பலவற்றுக்கும் அவர்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்தத் திட்டம் பற்றி மெர்டேக்கா தலைமுறையினரில் சிலர் 'செய்தி'யிடம் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்