Images
  • merdeka
    (படம்: MCI)

மெர்டேக்கா தலைமுறையினருக்கு NTUC FairPrice பேரங்காடியின் சிறப்புச் சலுகை

மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த மூத்தோர்  NTUC FairPrice பேரங்காடிகளில் வாங்கும் பொருள்களுக்கு  3 விழுக்காடு கழிவைப் பெறவிருக்கின்றனர்.

அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் 140க்கும் அதிகமான NTUC FairPrice பேரங்காடிகளில் அவர்கள் அந்தச் சலுகையைப் பெறலாம்.

ஓராண்டுக்கு அந்தச் சலுகை நடப்பில் இருக்கும்.

முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும் அது நீட்டிக்கப்படும்.

அவர்கள் ஏற்கனவே திங்கட்கிழமைகளில் அதேபோன்ற கழிவைப் பெற்றுவருகின்றனர்.

அடுத்தமாதத்திலிருந்து அவர்கள் தங்கள் EZ-Link அட்டைகளைப் பயன்படுத்திப் பொருள் வாங்க முடியும்.

PAssion Silver அட்டை, PAssion Silver சலுகை அட்டை ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

PAssion Silver சலுகை அட்டையில் அரசாங்கம் வழங்கும் 100 வெள்ளி
நிரப்புத்தொகையையும் மெர்டேக்கா தலைமுறையினர் பெறவிருக்கின்றனர். 

Top