Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செந்தோசாவில் உள்ள மெர்லயன் சிலைக்குப் பிரியாவிடை கொடுக்கத் திரளும் பார்வையாளர்கள்

செந்தோசாவில் உள்ள மெர்லயன் சிலை இன்னும் இரண்டே நாள்களில் மூடப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -

செந்தோசாவில் உள்ள மெர்லயன் சிலை இன்னும் இரண்டே நாள்களில் மூடப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து வழக்கத்தைவிட மூன்றில் ஒருபங்கு அதிகமான பார்வையாளர்களை அது ஈர்த்துவருகிறது.

கடந்த 24 ஆண்டுகளாக, செந்தோசாவில் கம்பீரமாக நிற்கிறது மெர்லயன் சிலை.

இதன் உயரம் 37 மீட்டர்.

சுற்றுப்பயணிகள் அதிகமானோரை ஈர்க்கும் நோக்குடன் 750 மில்லியன் வெள்ளிப் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டது.

செந்தோசாவும் அதன் அருகே இருக்கும் பிரானி தீவும் மறுசீரமைக்கப்படுவதுபற்றிச் சென்ற மாதம் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மெர்லயன் சிலை இடிக்கப்படவுள்ளது.

அது இருக்கும் இடத்தில் செந்தோசாவின் வடக்கு, தெற்குப் பகுதிகளை இணைக்கும் புதிய தாழ்வாரம் ஒன்று உருவாக்கப்படும்.

அந்தத் தகவல் வெளியானதும் பலர் மெர்லயன் சிலையைக் கடைசியாக ஒரு முறை காணத் தீவிற்குத் திரண்டுவருகின்றனர்.

சிலையைக் காண்பதற்கான நுழைவுக் கட்டணமும் கணிசமாகக் குறைக்கப்பட்டது.

இந்த மாதம் மெர்லயனைக் காண சுமார் 39,000 பேர் செந்தோசா சென்றிருக்கின்றனர்.

சராசரியாக மாதந்தோறும் சுமார் 30,000 பார்வையாளர்கள் மட்டுமே இதைக் காண வருவர்.

நாளை மறுநாள் மெர்லயன் சிலை மூடப்பட்டுப் பின்னர் இடிக்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்