Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேன் முன்கண்ணாடியை உலோகக் கம்பம் உடைத்து நுழைந்ததால் ஓட்டுநருக்குக் காயம்

கடந்த செவ்வாய்க்கிழமை புங்கோல் (Punggol) வெளிவாயிலுக்கு அருகில் அந்தச் சம்பவம் ஏற்பட்டது.

வாசிப்புநேரம் -
வேன் முன்கண்ணாடியை உலோகக் கம்பம் உடைத்து நுழைந்ததால் ஓட்டுநருக்குக் காயம்

(படம்: Facebook / Rasyid Epvmc)

தம்பனீஸ் (Tampines) விரைவுச்சாலையில் வேன் ஒன்றின் முன்கண்ணாடியை உலோகக் கம்பம் ஒன்று உடைத்து நுழைந்ததைத் தொடர்ந்து, வாகனத்தின் ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை புங்கோல் (Punggol) வெளிவாயிலுக்கு அருகில் அந்தச் சம்பவம் ஏற்பட்டது.

வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தபோது, அந்த உலோகக் கம்பம் எங்கிருந்தோ பறந்து வந்ததாக அந்த 31 வயது ஆடவர் Facebook பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.

வாகனத்தைச் சாலை ஓரத்தில் அவர் நிறுத்தினார்.

அங்கிருந்து அவர் கூ தேக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்