Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளியுறவு அமைச்சிலிருந்து அழைப்பதாகக் கூறும் மோசடி நபர் குறித்து புகார்

வெளியுறவு அமைச்சிலிருந்து அழைப்பதாகக் கூறி பணத்தை வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிடச் சொல்லிவரும் ஆடவர் குறித்து அமைச்சு எச்சரிக்கைக் விடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
வெளியுறவு அமைச்சிலிருந்து அழைப்பதாகக் கூறும் மோசடி நபர் குறித்து புகார்

கோப்புப்படம்: CNA

வெளியுறவு அமைச்சிலிருந்து அழைப்பதாகக் கூறி பணத்தை வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிடச் சொல்லிவரும் ஆடவர் குறித்து அமைச்சு எச்சரிக்கைக் விடுத்துள்ளது.

குறிப்பிட்ட ஓர் இணையத்தளத்தின்வழி பணம் மாற்றிவிடும்படி தங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக 3 பேர் நேற்று(ஜூன் 19) புகார் செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

அமைச்சின் முக்கிய தொலைதொடர்பு எண்ணிலிருந்து அந்த அழைப்பு வந்ததாகப் புகார்களில் கூறப்பட்டது.

சம்பவங்களை அமைச்சு மோசடிகள் என்று அதன் Facebook பக்கத்தில் கூறியுள்ளது.

தொழில்நுட்பம் வழியாக  உண்மையான தொலைபேசி எண்ணை மறைத்து, அதற்குப் பதில் 6379 8000 என்ற அமைச்சின் எண்ணைக் கொண்டு மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று அமைச்சு தெரிவித்தது .

அத்தகைய அழைப்புகள் வந்தால், பொதுமக்கள் அமைச்சைத் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெளிவுப்படுத்திக்கொள்ளலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது.

பணம் மாற்று நடவடிக்கை குறித்த விவரங்கள், தனிநபர் தகவல் போன்றவற்றை அதிகாரிகள் தொலைபேசி வழி கேட்பதில்லை என்று அமைச்சு சொன்னது.

பெயர், அடையாள அட்டை எண், கடப்பிதழ் , வங்கி எண் போன்ற விவரங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சு வலியுறுத்தியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்