Images
  • MFA Travel advice (1)

வெளிநாட்டிற்குச் செல்கிறீர்களா? கவனம் தேவை!

விடுமுறைக் காலத்தில் அனைவரும் வெளிநாட்டிற்குச் செல்வது வழக்கம்.. அப்போது நாம் சிலவற்றைக் கவனத்தில் கொள்வது அவசியம் என்கிறது சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு.

விபத்துகள், இயற்கைப் பேரிடர்கள், பயங்கரவாதம் போன்றவற்றைச் சமாளிக்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என அது அறிவுறுத்தியது.

சிங்கப்பூரைவிட்டு வெளியேறுவதற்கு முன், வெளிநாட்டிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகக் கட்டமைப்புகள் பற்றித் தெரிந்துவைத்திருப்பது நல்லது.

பயணக் காப்புறுதியையும் அதன் அம்சங்களையும் புரிந்துவைத்திருக்கவேண்டும்.

வெளியுறவு அமைச்சின் இணையப்பக்கத்தில்: https://www.mfa.gov.sg மறக்காமல் பதிவு செய்துகொள்ளுங்கள். அவசரக்காலத்தின்போது அமைச்சு உதவுவதற்கு அது வழிவகுக்கும்.

மேலும், வெளிநாடுகளில் பயணம் செய்யும்போது என்றும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

கூட்டம் கூடும் இடங்களில் அதிகம் கவனம் தேவை.
தகராறுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடிய இடங்களைத் தவிர்ப்பது நல்லது.

உங்கள் பயணத்தில் உத்தேசத் தாமதம் ஏற்படுவது குறித்து விழிப்பாக இருங்கள்.

முக்கியமாக, நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்.

வெளிநாட்டில் இருக்கும்போது ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் வெளியுறவு அமைச்சுக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்: +65 6379 8800/8855.


 

Top