Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடற்பகுதியில் அத்துமீறி இருக்கும் மலேசியக் கப்பலுக்கு ஜொகூர் முதலமைச்சர் வந்துசென்றது "சினமூட்டும் செயல்": சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

சிங்கப்பூரின் கடற்பகுதியில் அத்துமீறி இருக்கும் மலேசியக் கப்பலுக்கு ஜொகூர் முதலமைச்சர் ஓஸ்மான் சப்யான் வந்துசென்றது "சினமூட்டும் செயல்" என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
கடற்பகுதியில் அத்துமீறி இருக்கும் மலேசியக் கப்பலுக்கு ஜொகூர் முதலமைச்சர் வந்துசென்றது "சினமூட்டும் செயல்": சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

(படம்: Singapore Police Force)

சிங்கப்பூரின் கடற்பகுதியில் அத்துமீறி இருக்கும் மலேசியக் கப்பலுக்கு ஜொகூர் முதலமைச்சர் ஓஸ்மான் சப்யான் வந்துசென்றது "சினமூட்டும் செயல்" என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

இரு நாடுகளும் தங்களுக்கிடையே இருந்துவரும் பூசலை அமைதியாகவும் ஆக்ககரமாகவும் தீர்வுகாணச் செய்துகொள்ளப்பட்ட ஓர் உடன்பாட்டைக் கீழறுக்கும் விதமாக முதலமைச்சரின் வருகை அமைந்ததாக வெளியுறவு அமைச்சு கூறியது

ஜொகூர் முதலமைச்சரின் "அனுமதிக்கப்படாத வருகையை" எதிர்த்து வெளியுறவு அமைச்சு இம்மாதம் (ஜனவரி) 9ஆம் தேதி கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்தது.

அமைதியாக, ஆக்ககரமான முறையில் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதாக இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துள்ளனர்.

அவரின் வருகையினால் ஏற்கனவே திட்டமிட்டிருந்த 14ஆவது இஸ்கந்தர் மலேசியா கூட்டு அமைச்சர்நிலைக் குழுச் சந்திப்பைத் தள்ளிவைக்கும் முடிவை சிங்கப்பூர் எடுக்கவேண்டியிருந்தது.

அந்தச் சந்திப்பு நாளை (ஜனவரி 14) நடப்பதாக இருந்தது.

இருப்பினும் மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலியுடன் சந்திப்பு நடத்தத் தயாராய் உள்ளதாக வெளியுறவு அமைச்சு கூறியது.

அக்டோபர் மாதம் ஜொகூரின் துறைமுக எல்லைகளை மலேசியா விரிவுபடுத்தியதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மலேசியக் கப்பல்கள் சிங்கப்பூர்க் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.

கப்பல்கள் நுழைவதற்கும், துறைமுக எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும் சிங்கப்பூர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் போக்குவரத்துத் துறையும் துவாஸ் பகுதியில் அதன் துறைமுக எல்லையை விரிவுபடுத்தியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்