Images
  • MHA
    படம்: CNA

ஊழியர்களுக்கும் பங்காளிகளுக்கும் விருது வழங்கி கெளரவித்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சு

சிங்கப்பூர் உள்துறை அமைச்சு, தனது ஊழியர்களுக்கும், பங்காளிகளுக்கும் 190 விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அங்கீகரிக்கும் 27 ஊழியர் கொண்ட குழுவுக்கு உள்துறைக் குழு சாதனை விருதுகளை வழங்கியது.

முன்னாள் குற்றவாளிகளை மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய ஊழியர்களும் அங்கீகரிக்கப்பட்டனர்.

சிங்கப்பூர் சிறைச் சேவையின் FIRST எனும் முன்னோடித் திட்டத்தில் பங்கெடுத்துள்ள 34 பேர் கொண்ட குழுவுக்கு விருது வழங்கப்பட்டது.

26 அரசாங்க அமைப்புகள், 15 நிறுவனங்கள், 10 வெளிநாட்டு அமைப்புகள், ஆகியவற்றுக்கும் விருது வழங்கி உள்துறை அமைச்சு அங்கீகரித்தது. 

Top