Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எலும்பு நல மருத்துவருக்கு அபராதம் விதித்த தனது முடிவைப் பரிசீலனை செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கோரும் சிங்கப்பூர் மருத்துவ மன்றம்

சிங்கப்பூர் மருத்துவ மன்றம், எலும்பு நல மருத்துவர் ஒருவருக்கு அபராதம் விதித்த தனது முடிவைப் பரிசீலனை செய்ய, நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருக்கிறது. 

வாசிப்புநேரம் -
எலும்பு நல மருத்துவருக்கு அபராதம் விதித்த தனது முடிவைப் பரிசீலனை செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கோரும் சிங்கப்பூர் மருத்துவ மன்றம்

படம்:

சிங்கப்பூர் மருத்துவ மன்றம், எலும்பு நல மருத்துவர் ஒருவருக்கு அபராதம் விதித்த தனது முடிவைப் பரிசீலனை செய்ய, நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருக்கிறது.

சுகாதார அமைச்சு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், மன்றம் அந்த அனுமதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்தகைய வேண்டுகோளை மன்றம் விடுப்பது இதுவே முதல் முறை. சிகிச்சையொன்றின் உத்தேசப் பக்கவிளைவுகள் குறித்து நோயாளிக்கு விளக்கத் தவறியதாகக் கூறி டாக்டர் லிம் லியன் ஆர்னுக்கு 100 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

டாக்டர் லிம், தனது நோயாளிக்கு ஓர் ஊசி மருந்தைச் செலுத்தியபின் அவருக்குச் சில பிரச்சினைகள் உருவாயின. அந்த மருந்தால் ஏற்படக்கூடிய தீய பக்கவிளைவுகள் குறித்து, டாக்டர் லிம் தம்மிடம் தெரிவிக்கவில்லை என அந்த நோயாளி குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதனையடுத்து, டாக்டர் லிம்முக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அது, மருத்துவ சமூகத்தில் கடும் விவாதத்தைக் கிளப்பியது.

நோயாளிக்கு ஏற்பட்ட பக்கவிளைவு கடுமையானதோ நிரந்தரமானதோ அல்ல என்பதால்,100 ஆயிரம் வெள்ளி அபராதம் மிக அதிகமானது எனப் பலரும் கருத்துத் தெரிவித்தனர். அந்த அபராதத்தை, டாக்டர் லிம்மும் மருத்துவ மன்றமும் ஏற்றுக்கொண்டதை அமைச்சு நேற்று விடுத்த அறிக்கை சுட்டியது.

ஆனால் அந்த முடிவு, மருத்துவத் துறையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்று அமைச்சு தெரிவித்தது. மருத்துவர்கள், தங்களைத் தற்காக்கும் போக்கில் செயல்பட அது தூண்டக்கூடும்.

அது, நோயாளிகளிடமும் மருந்தகப் பாதுகாப்பிலும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமென அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்