Images
  • Shanmugam Chong Pang (1)
    (படம்: TODAY)

சட்ட அமலாக்க அமைப்புகளின் அதிகாரத்தைக் கீழறுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: சட்ட, உள்துறை அமைச்சர்

சட்ட அமலாக்கத் துறை அமைப்புகளின் அதிகாரத்தைக் கீழறுக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அமலாக்கத் துறை மீதான பொறுப்பற்ற சமூக ஊடகக் குறைகூறல்களை அமைச்சு சுட்டியது.

காவல்துறையால் புலனாய்வு செய்யப்படும் சிலர், சிறப்பு விதிவிலக்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

அத்தகைய செயல்கள் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு சட்ட அமலாக்கத் துறைமீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பாதிக்கும் என்று, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.

சட்ட அமலாக்கத் துறை மீது பொதுமக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருக்க உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவு, வெளிநாட்டுப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவது அவசியம் என்று திரு. சண்முகம் கூறினார்.

இணையக் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், மின்னிலக்கத் தடய-வியல் திறன்களை மேம்படுத்துவதற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும் அவர் சொன்னார். 

Top