Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முத்து’ஸ் கறி, பிஸ்மில்லா பிரியாணிக்கு மிஷெலின் அங்கீகாரம்

சிங்கப்பூரின் 58 உணவுக் கடைகள் இவ்வாண்டுக்கான மிஷெலின் Bib Gourmand அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

வாசிப்புநேரம் -
முத்து’ஸ் கறி, பிஸ்மில்லா பிரியாணிக்கு மிஷெலின் அங்கீகாரம்

(படம்: Facebook/Muthu’s Curry)

சிங்கப்பூரின் 58 உணவுக் கடைகள் இவ்வாண்டுக்கான மிஷெலின் Bib Gourmand அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் அமைந்துள்ள முத்து’ஸ் கறி உணவகம் இந்த ஆண்டும் அந்த அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொண்டது.

பிஸ்மில்லா பிரியாணி, ஆங்கிலோ இந்தியன் (Anglo Indian), லக்னா (Lagnaa), ஜாஃப்ரான் கிட்சன் (Zaffron Kitchen) போன்ற இந்திய உணவகங்களுக்கும் மிஷெலின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சென்ற ஆண்டு அங்கீகாரம் பெற்ற உணவகங்களின் எண்ணிக்கை 50.

பட்டியலில் இடம்பெற்ற 58 உணவுக்கடைகளில் 33 உணவங்காடி நிலையங்களிலும், 6 கடைவீதி உணவகங்களும், 19 உணவகங்களும் இருக்கின்றன.

இந்த ஆண்டு 12 புதிய உணவுக்கடைகள் இடம்பெற்றிருக்கின்றன

1997ஆம் ஆண்டு நிறுவப்பட்டது Bib Gourmand அங்கீகாரம்.

45 வெள்ளிக்கும் குறைவான விலையில், தரமான உணவுவகைகளைத் தரும் உணவுக் கடைகளிலிருந்து, மிஷெலின் சோதனையாளர்கள் தெரிவுசெய்யும் கடைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

நான்காவது ஆண்டாக சிங்கப்பூரில் மிஷெலின் பட்டியல் வெளியிடப்படுகிறது.

வரும் 17ஆம் தேதி உணவகங்களுக்கு மிஷெலின் நட்சத்திரங்கள் கொடுக்கப்படவிருக்கின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்