Images
  • Middle Road Fire
    (படம்:  Ian Cheng/ CNA)

மிடல் ரோட்டில் தீப்பற்றி எரிந்த டாக்சி


டாக்சி ஓட்டுநர் ஒருவர் தம்முடைய வாகனம் தீப்பற்றிக் கொள்வதற்குச் சற்று முன்னர் அதிலிருந்து வெளியேறி உயிர்பிழைத்தார்.

ComfortDelGro டாக்சி ஓட்டுநரான திரு. இயோ, மிடல் ரோட் (Middle Road ) வழியே இன்று (ஜூலை 11) மதியம் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவருடைய வாகனத்தின் பின்புறத்திலிருக்கும் புகைபோக்கியிலிருந்து வெள்ளைப் புகை வருவதைக் கவனித்திருக்கிறார்.


அப்போது டாக்சியில் பயணிகள் யாரும் இல்லை.

உடனே சாலையோரத்தில் டாக்சியை நிறுத்திவிட்டு, முக்கியமான பொருள்களோடு அதிலிருந்து வெளியேறினார் திரு. இயோ.

அதற்குள் டாக்சியின் முன்புறத்திலிருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கியது.


சம்பவம் குறித்து மாலை 4.30 மணிக்குத் தகவல் பெற்றதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

 

Top