Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய POSB Jolly செயலி

வெளிநாட்டு ஊழியர் சேவை மையமும், POSB வங்கியும் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கான POSB Jolly என்னும் புதிய செயலியை உருவாக்கியுள்ளன.

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய POSB Jolly செயலி

(படம்: MWC)

வெளிநாட்டு ஊழியர் சேவை மையமும், POSB வங்கியும் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கான POSB Jolly என்னும் புதிய செயலியை உருவாக்கியுள்ளன.

முதல் ஆண்டில், கிட்டத்தட்ட 200,000 ஊழியர்கள் செயலியின் மூலம் பயன்பெறுவர் என அவை இரண்டும் நம்புகின்றன.

ஊழியர்களுக்கு மின்னிலக்க முறையில் சம்பளம் வழங்குவது கட்டயமாக்கப்பட வேண்டும் என வெளிநாட்டு ஊழியர் சேவை மையம் வலியுறுத்தி வருகிறது.

இலவசச் செயலி அதற்கு ஏதுவாக அமையும்.

ஊழியர்கள் செயலியைப் பயன்படுத்தி, பணப்பரிவர்த்தனை புரிவதோடு, வாழ்க்கைமுறைச் சலுகைகள் பலவற்றையும் அனுபவிக்கலாம்.

காப்புறுதித் திட்டம், பயணச் சலுகைகள் போன்றவற்றோடு, சுலபமாக oBike சைக்கிள்களை வாடகைக்கும் எடுக்கலாம்.

செயலியின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நாம் ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்தித் தருவது அவசியம் என்றார்.

வெளிநாடு ஊழியர்கள் உட்பட அனைவரையும் சிங்கப்பூர், நன்றாக கவனித்துக் கொள்ளும் என்ற உணர்வை நாம் வெளிநாட்டினருக்கு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் ஊழியர்கள் தங்களுக்குக் கிடைத்த சிறந்த அனுபவங்களை அதன் வழி மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வர் என்றும் திரு. சான் கூறினார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்