Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தகுதிபெற்ற வெளிநாட்டு ஊழியர்கள் அக்டோபர் 31ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லலாம்

தகுதிபெற்ற வெளிநாட்டு ஊழியர்கள் அக்டோபர் 31ஆம் தேதி முதல், தங்கள் ஓய்வுநாளில் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லலாம் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
தகுதிபெற்ற வெளிநாட்டு ஊழியர்கள் அக்டோபர் 31ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லலாம்

(கோப்புப் படம்: Rachel Phua)

தகுதிபெற்ற வெளிநாட்டு ஊழியர்கள் அக்டோபர் 31ஆம் தேதி முதல், தங்கள் ஓய்வுநாளில் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லலாம் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் 2 மாதச் சோதனைக்குப் பின், உள்ளூர் அளவில் கிருமித்தொற்று விகிதம் குறைவாக உள்ளதால் ACE பணிக்குழு அந்த முடிவை எடுத்தது.

நோய்த்தொற்றிலிருந்து குணமாகி நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ள ஊழியர்களும் வழக்கமாக நடத்தப்படும் பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்படும் ஊழியர்களும் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லலாம்.

அங்குள்ள பல்வேறு வசதிகளை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் நடப்பில் இருக்கும் வேளையில், ஊழியர்கள் தங்கள் நண்பர்களையும் சந்திக்கலாம்.

இதுவரை, வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்காகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் மட்டுமே விடுதியை விட்டு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

SGWorkPass செயலி மூலம், ஊழியர்கள் 7 நாள்களுக்கு முன்பு வரை தங்கள் விடுதிக்கு ஒதுக்கப்பட்ட பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்வதற்குப் பதிந்துகொள்ளலாம்.

சரியான அனுமதி இருந்தால் மட்டுமே, அவர்கள் நிலையத்தினுள் அனுமதிக்கப்படுவர்.

கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்