Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுகளுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட மிக்கி புரோஷே

சிங்கப்பூரில் HIV பாதிப்புக்கு ஆளானோர் தகவல்களைக் கசியவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் அமெரிக்கர் மிக்கி புரோஷே (Mikhy Brochez) கெண்ட்டக்கி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளார். 

வாசிப்புநேரம் -
அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுகளுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட மிக்கி புரோஷே

(படம்: Chris Kenning)

சிங்கப்பூரில் HIV பாதிப்புக்கு ஆளானோர் தகவல்களைக் கசியவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் அமெரிக்கர் மிக்கி புரோஷே (Mikhy Brochez) கெண்ட்டக்கி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளார்.

தம் அம்மாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், அங்கிருந்து வெளியேற மறுத்ததன் தொடர்பில் சென்ற டிசம்பரில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

புரோஷேவைக் கைது செய்த அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் மீதான விசாரணையை அடுத்த மாதம் 4 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

முன்னதாக, நீதிமன்றத்துக்கு வெளியே, HIVயால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை வெளியிட்டதன் தொடர்பில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், அவர் அது பற்றி நேரடியாக எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.

சிங்கப்பூர் சிறையில் இருந்தபோது தம் மீது நடத்தப்பட்ட பாலியல் அத்துமீறல் காரணமாகவே தமக்கு HIV பாதிப்பு ஏற்பட்டதாக புரோஷே மீண்டும் கூறினார். ஆனால், அவருடைய குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்று சிங்கப்பூர் அதிகாரிகள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்