Images
  • million
    (படம்: AFP/Jung Yeon-je)

வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பை மில்லியன் கணக்கானோர் பார்த்தனர்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையில் சிங்கப்பூரில் நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பை உலகமே உற்றுக் கவனிக்கிறது.


அதே வேளை தொலைகாட்சியில் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பானதையும் மில்லியன் கணக்கானோர் பார்த்தனர்.

தென்கொரியாவின் ரயில்வே நிலையங்களிலும் பல்வேறு பொது இடங்களிலும் உச்சநிலைச் சந்திப்பு ஒளிபரப்பானதைக் காண ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

முதல்முறை திரு.டிரம்ப்பும் திரு. கிம்மும் சந்தித்துக் கைகுலுக்கியபோது மக்கள் ஆரவாரம் செய்து கைதட்டினராம்!


சோலின் முக்கியமான கட்டடங்களில் பெரிய திரைகளில் சந்திப்பு ஒளிபரப்பாகிறது.

இருதலைவர்களும் கைகுலுக்கியதைக் கண்ட தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் புன்னகை புரிந்ததை யொன்ஹாப் செய்தி நிறுவனம் காட்டியது.

உச்சநிலைச் சந்திப்பு நடைபெறுவதையொட்டி அனைவரின் கவனமும் சிங்கப்பூரின் பக்கம் தான் இருக்கும் எனத் தாம் நினைப்பதாக அவர் கூறியிருக்கிறார். 


இந்நிலையில் சோலில் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
70 ஆண்டுப் பகைமையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அமைதி உடன்படிக்கை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அமெரிக்கத் தூதரகத்துக்கு வெளியே போராட்டம் நடந்தது. 

Top